(  நூரளை பி. எஸ். மணியம்)
மலையகத்தில் சந்திரசேகரின் கனவும் இராதாகிருஷ்ணின் இலக்கும் நிறைவேறும் காலம் மிக தொலைவில் இல்லை. இராஜாராம் கூறுகிறார்.
முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் இலட்சிய கனவும் தற்போதய தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணின் இலட்சியமும் நிறைவேறும் காலம் வெகு தூரம் இல்லை.
என மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள்  மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர் இராஜாராம் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளராக செயல்பட்டு வந்த இராஜாராம் தற்பொழுது கட்சியின் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று (20) புதன்கிழமை நுவரெலியா காரியாலயத்தில் நடைபெற்ற   ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில்மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கை யில், மலையக சமூகம் சலுகை சார்ந்த சமூகமாக இல்லாமல் அரசியல் சார்ந்த உரிமை பெற கூடிய சமூகமாக மாற்றமடைய வேண்டும். என்பதே எமது நோக்கம் அவ்வாறு எமது சமூகம் அரசியல் சார்ந்த சமூகமாக மாற்றமடையும் பொழுது நாம் அரசாங்கத்திடம் சலுகைக்காக கையேந்தி நிற்க தேவையில்லை. நாம் உரிமையை கேட்கும் சமூகமாக மாற்றமடையும்.
இந்த நாட்டில் மலையக மக்கள் ஒரு தனி தேசிய இனமாக அங்கிகரிக்கப் பட்டு தேசிய நீரோட்டத்தில் இணைத் துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அரசாங்கத்தால் ஏனைய சமூகங்களுக்கு வழங்கும் உரிமைகள் எமது சமூகத்திற்கும் கிடைக்கும்.
தற்பொழுது மலையக மக்கள் முன்னணியில் ஒரு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் சந்திரசேகரின் கனவையும் இராதாகிருஷ்ணின் இலக்கையும் அடையும் காலம் வெகு தூரமில்லை.
அமரர் சந்திரசேகரன் காலத்தில் மலையக பெருந்தோட்ட  மக்களின் உரிமைசார்ந்த விடங்களிலும் மலையகத்தில் உள்ளூராட்சி  சபைகளும் பிரதேச செயலகங்களும் அதிகரிக்க வேண்டும். மலையக பெருந்தோட்ட மக்கள் வாழும பிரதேசங்களான நுவரெலியா,  பதுளை மற்றும் இரத்தினபுரி உள்ளடங்களாக  ஒரு மாகாண அலகு எங்களுக்கு  வேண்டும்.என்று அன்றே  குரல் கொடுத்து விதை விதைத்தவர்தான் அமரர் சந்திரசேகரன்  அந்த வேலைத் திட்டம் உறுவாகி வருகிறது. தற்பொழுது உள்ளூராட்சி சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கு இன்றைய தலைவர்கள் பாடுபட்டாலும் அதற்கு விதை போட்டவர் சந்திரசேகரன்தான்.அன்று அவர் விதைத்த விதை தற்பொழு முளைத்து வருகின்றது.
அதன் அடிப்படையில் சந்திரசேகரன் இலக்கை நோக்கி இன்றைய தலைவர் இராதாகிருஷ்ணன் அந்த கட்சியை முன்னெடுத்து செல்கின்றார். எனவே கட்சியின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக இளைஞர்களையும் அனுபவசாலி களை இணைத்துக்கொண்டு செயலில் இடுபடுவதற்காகவே கட்சியில் ஒரு மாற்றத்தை தலைவர் இராதாகிருஷ்ணன் கொண்டு வந்துள்ளார். அவரின் எதிர்கால வேலைத்திட்டத்தில்  ஒன்றுதான் மலையக மக்கள் ஒரு தனி தேசிய இனமாக அங்கிரிக்க வேண்டும். என்பதே   அவரின் இலக்கு.இதனை பல வருடங்களாக அரசாங்கத்திடம் மலையக மக்கள் முன்னணி வழியுறுத்தி வருகின்றது.என்ன அமைச்சு கிடைத்தாலும் என்ன பதவி பட்டங்கள் கிடைத்தாலும் எங்களது மக்களுக்கு சரியான உரிமை கிடைக்கவேண்டும். என்பதே எமது கட்சியின் அடித்தளமாக இருந்து செயல்பட்டு வருகின்றது.
எமது மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்ற போர்வையிலும் ஒரு அரசியல் மயமாக்கப்பட்ட சமூகம் என்ற நிலைமையை கொண்டு வருவதே எமது இலக்கு அந்த இலக்கை அடையும் பொழுது எங்களுக்கான தனி வீட்டு திட்டமும் எங்களுக்கான காணி உரிமையும் பெற்றுக்கொள்ளகூடிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் செயல்படுகின்றோம். என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *