இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மன்னாருக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை (25,26) ஆகிய இரு தினங்கள் விஜயத்தை மேற்கொண்டு மன்னார் மாவட்டத்தில் பழமை வாய்ந்ததும் உலகம் போற்றும் புனித ஸ்தலங்களாக விளங்கும் புதுமைமிக்க மருதமடு அன்னையின் ஆலயத்துக்கும் , பாடல் தளமாக விளங்கும் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கும் விஜயத்தை மேற்கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றுள்ளார்.
அத்துடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையும் சந்தித்துள்ளார்.
மன்னார் ஆயருடன் நல்லதொரு கலந்துரையாடலில் தான் ஈடுபட்டதாகவும் , அத்துடன் நாணுறு வருடங்கள் பழமை வாய்ந்த மிகவும் சக்தி வாய்ந்த புதுமைமிக்க மடு அன்னை ஆலயத்தை தரிசித்ததாகவும்
இதன்போது தற்பொழுது இடம்மாற்றம் பெற்று செல்ல இருக்கும் மடு பாரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளாரும் மற்றும் தற்பொழுது மடு பரிபாலகராக பொறுப்பேற்கும் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரும் தன்னை அன்பாகவும் பண்பாகவும் வரவேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க தூதுவர் தெரிவித்திருப்பதாவது தான் மன்னார் பாடல் தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்துக்குச் சென்றதும் இவ் ஆலய பரிபாலகச் சபைத் தலைவர் எந்திரி எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தன்னை மிகவும் அன்போடு வரவேற்றதாகவும்
அத்துடன் அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டபின் தலைவருடன் கலந்துரையாடியதுடன் அவ் ஆலய தொடர்பான சரித்திரங்களையும் கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னைய அமெரிக்க தூதுவர் இப்புனித ஸ்தலத்துக்கு விஜயம் செய்திருந்ததையும் அமெரிக்க தூதுவர் திரு இராமகிருஷ்ண் அவர்களிடம் நினைவு கூறியதும் குறிப்பிடத்தக்கது
(வாஸ் கூஞ்ஞ)