அமெரிக்காவின் வோசிங்டனில் இசை நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இசை நிகழ்ச்சி நடைபெற்ற பூங்காவிற்குள் நுழைந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போதிலும் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *