அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர மேலும் சுமார் 07 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.