தெற்கு வியட்நாமின் மஞ்சள் நிறக் கொடி உருவம் கொண்ட நாணயத்தை அவுஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகளில் சாதகமான போக்குகளை நிராகரிப்பதாக கூறியுள்ள வியட்நாம் நாணயத்தின் புழக்கத்தை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வியட்நாமில் இருந்து தனது படைகள் வாபஸ் பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவுஸ்திரேலியா இந்த வரையறுக்கப்பட்ட இரண்டு டொலர் நாணயத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாமின் வெளிவிவகார பிரதி செய்தித் தொடர்பாளர், மூன்று கோடுகள் கொண்ட மஞ்சள் கொடியுடன் பொருட்களை வெளியிடுவதையும், புழக்கத்தில் விடுவதையும் வன்மையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த நாணயத்தின் முன்பகுதியில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவமும் பின்புறம் UH-1H ஹெலிகாப்டரும் இருப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.