2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இணைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்த முன்மொழிவுக்கு ஆசிய கிரிக்கெட் சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, 13 போட்டிகளில் 04 அல்லது 05 போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் இலங்கையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போட்டி தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் சில தினங்களில் ஆசிய கிரிக்கட் சபை அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சர்ச்சைக்குரிய சூழ்நிலையால் அது தடைபட்டது.