ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், அவுஸ்திரேலிய அணி 386 ரன்களும் எடுத்தன.

7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3 வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

3வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனால் அவுஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது.

ஆனால் மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது.

இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது.

இறுதியில், 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து அவுஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால் 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் 28 ஆம் திகதி லோட்ஸில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *