இத்தாலியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இத்தாலியின் நாபோலி நகரத்தில் கடந்த 25-06-2023 திகதி அன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் 42 வயதான தினேஷ் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கார் ஒன்றில் 3 பேர் பயணித்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள தூணில் மோதி விபத்து ஏற்படடுள்ளது.

காரில் பயணித்த தினேஷ் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *