( நூரளை பி. எஸ். மணியம்)
இளைஞர்களால் மாத்திரமே நம் சமூகத்தை மாற்ற முடியும்.மலையக மக்கள் முன்னணியின்  இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
எமது சமூகம் இலங்கையில் குடியேரி 200 வருடங்கள் கடந்தும் இன்னும் நாம் எமது உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கின்றோம்.எமது தேவைகள் அனைத்துக்கும் வீதியில் இறங்கி போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இன்றும் இருக்கின்றோம்.
ஆனால் இந் நிலைமையை எமது இளைஞர் சமூகம் நினைத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும். இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக சிந்னையுடன் செயல்பட முன் வார்களானால் எமது சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
எமது சமூகத்தின் விடிவிற்காக  அனைவரும் ஓரணியாக பயணிப்போம் என மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இன்று நமது இளைஞர்கள் அனைத்து துறைகளிலிலும் முன்னோக்கி செல்கின்றார்கள். கல்வியாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும் அனைத்து துறைகளிலும் முன்னோக்கி செல்கின்றனர்.அதே போல பல சாதனையாளர்களும் உருவாகி வருகின்றனர்.இதெல்லாம் நமக்கு பெருமையான விடயம்.
இன்னும் இளைமறைக்காயாய் தமது திறமைகளை வெளி கொண்டுவர முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கான அங்கிகாரத்தை வழங்கவும் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்த மலையக மக்கள் முன்னணி தயாராக உள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக பொறுப்பேற்ற பிறகு  இளைஞர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர புதிய இளைஞர் அமைப்பு ஒன்றையும் கட்சியூடாக உருவாக்க உள்ளோம். எனவே அனைத்து இளைஞர்களும் ஒன்றாக ஓரணியில் பயணிப்போம் என மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *