ஈஸ்ட் வெஸ்ட் சிட்டி கெம்பஸ் (EAST WEST CITY CAMPUS) பல்கலைக்கழகத்தின் 2022 – 2023 ஆண்டுக்கான வருடாந்த பட்டமளிப்பு விழா பலாங்கொடை டயமண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, EAST WEST CITY CAMPUS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் இரத்தினபுரி மாவட்ட தலைமை பொறுப்பதிகாரி மகேஸ்வரன் இந்திரராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு NVQ அரச தரத்திலான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பொறுப்பேறுகளைப் பெற்ற மாணவர்ககளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *