உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது.
அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.
ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது.
இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.
அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.
சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கின.
அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.