உலகில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.
2023 இல் சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அவர் அதிக வருமானம் ஈட்டும் வீரர் ஆனார்.
போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில், அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் ரொனால்டோவின் வருமானம் 136 மில்லியன் டொலர்களாகும்
கடந்த 12 மாதங்களில் சூப்பர் வீரர் மெஸ்ஸியின் வருமானம் 130 மில்லியன் டொலர்களாகும.