ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு பொருத்தமான நபரை அடையாளம் கண்டுள்ளதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் கூறுகிறார்.
ஒரு பெண்ணான அவர், இனிவரும் காலங்களில் அப்பதவியை ஏற்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய சிஇஓ நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும் என பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புதிய நியமனம் தொடர்பான அதிகாரியின் அடையாளத்தை எலோன் மஸ்க் வெளியிடாத நிலையில், இது தொடர்பில் டுவிட்டர் நிறுவனத்தில் பலத்த விவாதம் இடம்பெற்றுள்ளது.
டுவிட்டர் உரிமையாளரான எலோன் மஸ்க்கின் இந்த அறிக்கையால், செயலிழந்த வடிவம் பெற்றிருந்த அவரது வர்த்தகங்கள் மீண்டும் வலுவடையும் என வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.