கனடாவின் புதன்கிழமை அதிகாலை வேளையில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் வான்கூவாரில் பகுதியில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் McNeill துறைமுகத்திற்கு 181 கிலோமீட்டர் தொலைவில் கடற் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் நான்கு தசம் மூன்று மேக்னிடியுட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் அளவீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.