கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் 16 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
அதேசமயம் இளைஞர் மேலிருந்து விழும் போது இன்னொருவர் மீது மோதுண்டமையினால் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மேம்பிள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.