கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது.
கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500 டொலர் பெறுமதியான மதுபான வகைகள் கனவாடப்பட்டுள்ளன.
றொரன்டோவின் காக்ஸ்வெல் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையில் அதிகாலை வேளையில் இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இரண்டு நபர்கள் கடையை உடைத்து உள்ளே புகுந்து சில வகை மதுபான போத்தல்களை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மதுபானம் களவாடிய நபர்களுடன் பெண் ஒருவரும் இருந்தார் என சி சி டிவி காணொளி மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.