கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வட அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையான காட்டுத் தீயினால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் புகையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுத் தீயினால் ஏற்படும் புகை மிகவும் ஆபத்தானது என்பதால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடிகளை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,
இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 20,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுத் தீ நிலைமை வார இறுதி வரை நீடிக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.