கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி இந்த மாணவர்கள், 2019 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள்.

அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி கடிதங்கள் அனுப்பியுள்ளது.

பொலிசார் தெரிவித்துள்ள தகவல் தற்போது, Education Migration Servicesஎன்ற அமைப்பை நடத்துபவர்களில் ஒருவரான Rahul Bhargava என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது கூட்டாளிகளான Brijesh Mishra மற்றும் Gurnam Singh என்பவர்களை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *