கனடாவில் கடந்த ஜனவரி மாதம் 153000 புதிய வேலை வாய்ப்புக்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
கனடாவில் வேலை வாய்ப்பு எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிகமாக உயர்வடைந்துள்ளது.
கனேடிய தொழிற்சந்தை தொடர்பில் நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்கு முற்றிலும் முரணான வகையில் தொழிற்சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் அண்டு செப்டம்பர் மாதம் முதல் கனடாவில் தொழில் சந்தை சாதக நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி வீத அதிகரிப்பினால் பொருளாதாரம் மந்தமடையும் என முன்னதாக எதிர்வுகூறப்பட்டிருந்தது.
முழு நேரத் தொழில்களே அதிகளவில் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
25 வயது முதல் 54 வயது வரையிலானவர்கள் அதிகளவில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.