கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தலைமைச்செயலாளர் மற்றும் அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து, கிழக்கு மாகாணத்துக்குரிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சு நடத்தினர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுதருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது உறுதியளித்தார்.
இதன் ஓர் அங்கமாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள நீர்விநியோக பிரச்சினையை சீர்செய்ய, உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய நீர் குழாய்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அத்துடன், தான் அமைச்சு பதவியை ஏற்ற பின்னர் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.