யாழ்ப்பாணம் நெடுந்தீவு மாவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொலைகளுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டில் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை அல்லது எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,கூறினார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மாவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகாயமடைந்த மற்றுமொரு பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உறவினர்கள் எனவும் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.