அடுத்த மாதம் 8ம் திகதி முதல் தேர்தலை கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி தேர்தல்கள் அலுவலகத்திற்கு வரவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பை சுற்றி வளைக்கவும் தயார் என அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
அஹுங்கல்ல வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது அனுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.