இந்தியா 2008,2019 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் முறையே சந்திரயான் 1, 2 மற்றும் 3 என மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக எப்படியோ நிலவை அடைந்ததனர் என்றும்,
எனினும்,இந்த 3 செயல்முறைகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும்,
2012 ஆம் ஆண்டு நமது நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சாட் 1 செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும்,
இது தொடர்பான அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் 3 முறை முயற்சித்தும் செலவழித்த பணத்தை விட நம் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் செயற்கைக்கோளுக்கான செலவு அதிகம் என்றும்,
இதற்காக செலவிடப்பட்ட 320 மில்லியன் டொலர்கள் என்ன ஆனது என்பது குறித்த அறிக்கையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும்,நிலவில் இறங்குவது எப்படி போனாலும் நாட்டை வங்குரோத்தாக்குவதற்கு இதுவும் காரணமே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *