சம்பள நிர்ணய சபைக்கு தொழிலாளர்களின் புதிய பிரதிநிதியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பள நிர்ணய சபையின் 30 ஆவது ஒழுங்குமுறைக்கு அமையாக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் ஊடாக சபையின் ஆயுட்காலம் 31.12.2023 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் செந்தில் தொண்டமானும் புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஆயிரம் ரூபா சம்பளம் போதாதென இ.தொ.கா அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் வர்த்தமானி ஊடாக சம்பள நிர்ணய சபை புதிய உறுப்பினராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பள நிர்ணய சபையில் செந்தில் தொண்டமான் இடம் பெற்றுள்ளமை கம்பனிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.