இன்னும் சில நாட்களில் எரிவாயு விலையை குறைக்க முடியும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பொருளாதாரம் வலுவடைந்து வருவதால், QR குறியீட்டின்படி எரிபொருள் விநியோகத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
70 வீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 35 வீதத்தை எட்டியுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் அதனை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர நம்பிக்கை உள்ளதாகவும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.