சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள பதில் பிரதமர் தர்மன் சண்முகரட்ணம் இலங்கை தமிழரா? இந்திய தமிழரா என்ற சர்ச்சை சமூக ஊடகங்களின் இன்றைய  வைரல் செய்தி

குறிப்பாக தமிழக ஊடகங்கள் அவரை இந்திய தமிழராக அடையாளம் காட்டிய போதிலும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரமுகர்கள்  இலங்கையின்  வடக்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்கள் அவரை இலங்கை தமிழர் என்றே அடித்து சொல்கிறார்கள்.

உதாரணமாக இளம் ஊடகவியலாளரான பார்த்தீபன் சண்முகநாதன் தனது டூவிட்டரில் தர்மன் சண்முகரட்ணம் இந்திய தமிழர் என இந்திய ஊடகங்கள் வெளியிடுவது தவறு என குறிப்பிட்டுள்ளார்

அதேபோன்று குளோபோல் தமிழ்  ஊடகத்தின் நிர்வாகியான ஊடகவியலாளர் அருன் ஆரோக்கியநாதன் தனது டூவிட்டரில்

திறமை வாய்ந்த இலங்கை வம்சாவளி சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதி ஆணித்தரமாக கூறி இருக்கிறார்

ஆயினும் உண்மையான செய்திகளை வழங்கும் நக்கீரன் தனது இணையத்தில் கூறி இருக்கிறது…

எது எப்படியோ  ஒரு தமிழன் ஜனாதிபதியானதை சந்தோஷப்படாத நமக்குள் எப்போது ஒற்றுயை உருவாகும்?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *