மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 107 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்கொண்டிருந்தால் அரசாங்கத்தால் திருட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.