( நூரளை பி. எஸ். மணியம்)
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபை தலைவராக மீண்டும் இராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் 51 ஆவது பொதுச்சபை கூட்டம் நேற்று முன் தினம் நேற்று (30) புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில், நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த பொதுச்சபை கூட்டறிகை, கடந்த வருட கணக்கரிக்கை செயலறிக்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் சபைக்கு சமர்ப்பித்ததோடு கடந்த வருட நிர்வாக சபை கலைக்கப்பட்டு ஆலய நிர்வாக சபையின் ஆயுட் காப்பாளரான வீ. ஆதிமூலம் தலைமையில் நிர்வாக சபை தெரிவு நடைபெற்றது.
இதன் போது முன்னாள் நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஏகமானதாக மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
பொதுச்செயலாளராக பி.லிங்கராஜா,பொருளாளராக எம். யாதவசிவம், உப தலைவர்களாக எஸ். பாலகிருஷ்ணன், என்.புவனேஸ்வரன் உப செயலாளராக எம் பெரியசாமி, ஜி. கிருஸ்ணகுமார் உப பொருளாளராக ஆர். குணசேகரன் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஆயுட் காப்பாளராக வீ. ஆதிமூலம், எல். நேருஜி, ஏ. சந்திரன், எஸ். கணேசன் ஆகியோருடன் காப்பாளராக இரா. பாலகிருஷ்ணன் கர். சுப்பிரமணியன் , எம். செல்லையா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.