சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐபிஆர்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சீனாவிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 350 அணு ஆயுதங்கள் இருந்தன. தற்போது சீனாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் 164 அணு ஆயுதங்கள் உள்ளன. 2030ம் ஆண்டுக்குள் அமெரிக்கா அல்லது ரஷ்யாவிடம் இருக்கும் அளவுக்கு சீனாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை தொடர்ந்து புதிய ரக ஏவுகணைகளை அறிமுகம் செய்வதன் மூலம் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதுபோல் தெரிகிறது.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை தடுத்து அழிப்பதில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தினாலும், சீனாவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் ஏவுகணைகளை உருவாக்குவதில் இந்தியா அதிக கவனம் செலுத்துவதுபோல் தெரிகிறது.

மொத்தம் உள்ள 9 அணு ஆயுதநாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன.

உலகளவில் மொத்தம் 12,512 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் 90% அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளது.

ரஷ்யாவிடம் 5,889, அமெரிக்காவிடம் 5,244, பிரான்ஸிடம் 290, இங்கிலாந்திடம் 225, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 30 அணு ஆயுதங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *