இலங்கைக் குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், காரணம் கூறாமல் குரங்குகளை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்வது மிகவும் சிக்கலான நிலை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குரங்குகள் அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை, கண்டி மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கைக்கு சொந்தமான விலங்குக் குழுவாகும்.