ஜெயிலர் என்ற பிரம்மாண்ட படத்திடம் சிக்காமல் இருக்க இந்த வாரமே தமிழில் 7 சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துடன் சிக்காமல் இருக்க இந்த வாரம் தமிழில் 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், சுனில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
சுப்ரமணியபுரம் ( ரீ ரிலிஸ்) , நட்டியின் வெப் , பிரியமுடன் பிரியா, லாக்டவுன் டயரி, முருடன்,சான்றிதழ், கல்லறை ஆகிய படங்களே வெளியாகவுள்ளன.