அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு சொந்தமான இரகசிய கோப்புகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை மியாமி பெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரலில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதுடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பில் இவ்வாறான விசாரணை ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும், புதிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என தாம் ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தன்னை ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கும் போர் என்று சமூக வலைதளங்களில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.