உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் ஆட்டம் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக இன்று (19) நடைபெற உள்ளது.
குரூப் Bயின் கீழ் புலவாயோவில் நடைபெறும் போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 12.30க்கு தொடங்க உள்ளது.
அயர்லாந்து அணிக்கும் ஓமன் அணிக்கும் இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு 02 பிரிவுகளில் 10 அணிகள் களமிறங்குவதுடன் போட்டிகள் ஜூலை 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.