அஸ்ரப் அலீ
திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு செந்தில் தொண்டமான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், ஆளுனர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட செயலகத்தின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு அலுவலர்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் செந்தில் தொண்டமான் தனது முன்னைய உத்தரவை மீளப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், குறித்த விகாரையை அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் உறுதியளித்துள்ளார் என போராட்டம் செய்த பௌத்த பிக்கு ஊடகங்களுக்கு கூறி இருக்கிறார்.