” நாங்க மலையக தமிழர்கள் இலங்கையில் இரண்டுவிதமான தமிழர்கள் இருக்கிறார்கள் ஒரு சாரர் ஈழத்தமிழர்கள்,மற்றவர்கள் மலையக தமிழர்கள் நாம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் எனது பூர்வீகம் திருச்சி நாமக்கல் பக்கத்திலுள்ள செருக்கலை ஊரில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்தோம் என இலங்கை கிரிக்ட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான முத்தையா முரளிதரன் கூறுகிறார்.
சென்னையில் 800 படத்தின் அறிமுக விழாவில் பேசூம் பேதே இதன அவர் தெரிவித்தார்.
பொதுவாக அவர் தமிழில் பேச மாட்டார் என நினைத்த பலருக்கு ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அழகான தமிழில் பேசியதை ஊடகவியலாளர்கள் பாரட்டினர்.
அங்கு மேலும் பேசிய அவர்,
இந்த திரைப்படம் வளர முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு அவருடன் எனது படத்தின் இயக்குனரான ஸ்ரீபதியும் இலங்கை வருகை தந்த போது எனது வீட்டிற்கு மதியபோஜனத்திற்காக வந்திருந்தார்.
அவர் எனது மனைவியின் சிறுவயதை நண்பர். இதனால் நானும் ஆர்வமாக எனது விருதுகள் என்னுடைய விபரங்களை பகிர்ந்து கொண்டேன்.
அந்நேரம் வெங்கட் பிரபு எனது வாழ்க்கைய படமாக எடுக்க வேண்டும் என தீர்மானித்தார் . ஏற்கனவே அவர் கிரிக்கட் படங்களை எடுத்த அனுபவசாலி.
இந்த திரைப்படம் ஊடக வரும் வருமானத்தை எனது பவுன்டேஷன் ஊடக மக்களுக்கு உதவ முடியும் என நினைத்து ஒத்து கொண்டேன்.
இதற்கான கதையை இயக்குனர் ஸ்ரீபதி இரண்டு வருடங்களாக இரவு பகல். பராது அயராது உஉழைத்து எழுதினார்.
ஆரம்பத்தில் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக தயாரிப்பு தரப்பிற்கும் அவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட அவர் விலக படத்தின் பொறுப்பை ஸ்ரீபதியே எடுத்து கொண்டு இயக்கினர்.
முதலில் விஜய்சேதுபதி நடிக்க இருந்தார் உங்களுக்கே தெரியுமே என்ன நடந்தது என்று புன்னகையோடு முரளி சிரித்தார்.
மேலும் தமது வாழ்கையின் உண்மை பக்கமே இந்த படத்தில் இருக்கிறது. நான் எல்லா வெற்றிகளையும் இலகுவில் பெறவில்லை அதேபோன்றே இந்த படமும் ஐந்து வருடங்களாக அதாவது இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் அத்துடன் கொழும்பு போராட்ட காலத்தில் வளர்ந்தது.
இந்த இடத்தில் நான் கிரிக்கட் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து என்னை தகப்பன் போன்று வளர்த்தவர் அர்ஜீன ரணதுங்க அவரை என்றுமே மறக்க மாட்டேன். அந்த கேரக்டராக கிங் ரட்ணம் வாழ்ந்திருக்கிறார்.
படத்தில் தமது பாத்திரத்தில் நடித்த மதுர் மிட்டால் தமது ஆக்ஷனில் பந்து வீசி இருப்பதை வியந்து பாராட்டிய அவர் ஏனைய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த படத்தின் டிரைலர்