நாட்டின் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுள் 15 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 36560 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கம்பஹா மாவட்டத்தில் 8200 நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 7600 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் 25 வீதமானோர் 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.