கனடாவின் பீல் பிராந்தியத்தில் நாணய மாற்று கடைகலில் துப்பாக்கி முனையில் கைவரிசை காட்டிய மூன்று இளைஞர்கள் மீது டசின் கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கொள்ளை தொடர்பாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், மார்ச் 2 முதல் மார்ச் 9 வரை இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்புடைய கடைகளில் பணத்தாள்களை மட்டுமே அவர்கள் இலக்கு வைத்ததாகவும், அதன் பின்னர் திருட்டு வாகனங்களில் அவர்கள் மாயமாகியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த கொள்ளை சம்பவங்களில் உடல் ரீதியான துன்புறுத்தல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மார்ச் 9ம் திகதி பிராம்டனில் உள்ள நாணய மாற்று கடைகளில் ஒன்றில் மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில், சமர்த்தியமாக நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார், மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாகி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மட்டுமின்றி, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு குடியிருப்புகளிலும் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்கள் மூவரில் இருவர் 17 வயதுடையவர்கள் எனவும் 16 வயதுடைய ஒருவர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீது 18 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கு பின்னர் இவர்கள் மீது இன்னும் வழக்கு பதியப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.