இந்திய. மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையில் கானாவில் இன்று நடைப்பெற்ற 2 வது சர்வதேச T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.
இதில் திலக் வர்மா நிதானமாக ஆடி 52. ஓட்டங்களை எடுத்தார். அதேபோன்று இஷான் கிஷன் 27 ஓட்டங்கள் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா 24 ஓட்டங்களை எடுத்தனர்.
பந்துவீச்சில் மேற்கிந்திய அணி சார்பாக. ஜோசப் உசேன், செப்பரட் ஆகியோர தலா. இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
வெற்றி இலக்கான 153 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடுகளம் நுழைந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்ப இரண்டு விக்கட்களையும் ஹர்திக் பாண்டியாவின் பந்துக்கு இழந்தது.
ஆயினும் அதிரடி ஆட்டக்காரரான நிக்லஸ் பூரான் அணித்தலைவர் ரொவமன் பவுலுடன் இணைந்து சிறப்பாக ஆடினார்.
நிக்லஸ் பூரான் 40 பந்துகளை எதிர்நோக்கி 67 ஓட்டங்கள் ( 4 சிக்ஸர் , 6 பவுண்டரிகள் அவருடன் பவுல் 21ஓட்டங்கள் ஹீட்மெயர் 22 ஓட்டங்களை எடுத்தனர்.
இறுதியில் 18 5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.