நியூசிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள 04 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டிடத்தில் சிக்கியிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் அங்கு சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், தீயை அணைக்க சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.