(நலிர் அகமட்)

ஆபத்தில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்பப்படுவதாக கூறப்படும் நாட்டில் நீர்க் கட்டணம் கூட அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பது மக்களை ஒடுக்கும் தன்னிச்சையான செயலாகும் என்றும், மக்களின் தோள்களில் சுமையை ஏற்றி எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கிட்டிய நாட்களில் எரிவாயு விலையும் அதிகரிக்கப்படும் போது மக்கள் ஆதரவற்றுப்போவர் என்றும்,அரசாங்கம் மக்கள் மீது எந்த உணர்வும் இல்லாது செயற்படுவதாகவும்,மக்களின் வாழும் உரிமையையும் கூட மீறியுள்ளதாகவும்,இது மக்கள் விரோத மனிதப்படுகொலை அரசாங்கமா என்ற சந்தேகம் எழுவதாகவும், அதிகரித்துள்ள நீர் கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

🔴*அடக்குமுறை அரசாங்கம் மிஹிந்தலை புனித பூமியின் மின்சாரத்தையும் துண்டித்துள்ளது*.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும்,பௌத்த மக்களின் தலைசிறந்த இடமான மிஹிந்தலை புனித ஸ்தலத்திற்கு இழைக்கப்பட்ட அரசாங்கத்தின் இழிவான செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும்,நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்துள்ள வேளையில்,
அதியுர் சட்டத்தையும் மீறி அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த இழிவான நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய பௌத்த ஆலோசனைக் குழுவும் ஒன்றாக இணைந்து விகாராதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த செலவை ஏற்க முடிவு செய்துள்ளதாகவும்,
அரசாங்கத்தின் இந்தச் செயல் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், இந்த பணத்தை ஜனாதிபதி நிதியத்தில் இருந்தோ அல்லது புத்தசாசன நிதியத்தில் இருந்தோ செலுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.

🔴*தீவிர சோசலிசத்தாலோ அல்லது தீவிர கம்யூனிசத்தாலோ ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.*

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இந்நாடு மீண்டு வர வேண்டுமானால் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும்,சந்தை சக்திகள் மூலம் உருவாக்கப்படும் மூலதன வளத்தை தடையின்றி, தடையற்ற சந்தை பொருளாதார சக்திகளில் உருவாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான முதலாளித்துவ கொள்கை அல்லது நடுத்தர பாதை ஊடாக இதற்கு இடமிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனிதாபிமான முதலாளித்துவத்தைப் போலவே,சந்தை சக்திகளுக்கும் மூலதன வளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவது போலவே இங்கு எழும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் களைந்து துன்பப்படுபவர்களை வலுப்படுத்த நியாயமான சட்ட கட்டமைப்பிற்குள் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் சேவைப் பாதுகாப்பும்,கடின உழைப்புக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும்,இதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை சுதந்திர சந்தை சக்திகளுக்கு மட்டும் வழங்க முடியாது என்றும்,இந்த நடுத்தர பாதையில் சுதந்திர தனியார் தொழில் முனைவோருக்கு அதிகபட்ச இடம் அளித்து மூலதன உற்பத்தியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கங்களால் தனியாக தொழில் முயற்சியாண்மைகளை செய்ய முடியாது என்பதால்,தனியார் நிறுவனத்தை அதற்கு பயன்படுத்தலாம் என்றும்,அவ்வாறு உருவாக்கப்படும் செல்வம் அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் பகிரப்படும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தீவிர சோசலிசத்தாலோ அல்லது தீவிர கம்யூனிசத்தாலோ ஒரு நாட்டை செழுமைக்கு கொண்டு செல்ல முடியாது என்றும்,இது ஒரு மாயை என்றும்,தனியார் தொழில்முனைவு மற்றும் மனிதநேய முதலாளித்துவம் ஒரு நாட்டில் மூலதனத்தை உருவாக்குவதற்கு அவசியம் என்றும்,இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் செல்வத்தை உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் சமமாகப் பங்கிடக்கூடிய மனிதநேய முதலாளித்துவ கட்டமைப்பு மிகவும் வெற்றிகரமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்து தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (3) தேசிய சேமிப்பு வங்கியின் ஐக்கிய ஊழியர் சங்க நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

🔴*அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த தொழிற்சங்கத்தால் சமூக நலத் திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறலாம்*.

இந்நாட்டில் சில தொழிலாளர்கள் சட்ட விதிகளையும் ஒழுங்குகளையும் முற்றாக அழித்து வரும் இத்தருணத்தில் தாம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பதாகவும்,இதன் திட்டங்களில் ஒன்றாக,உழைக்கும் மக்களின் நலனுக்காக இந்த வரலாற்றுத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாகவும்,
இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்காக வாய் சொல் ஊடாக மட்டுமன்றி செயலாலும் பாடுபடுவது ஐக்கிய மக்கள் சக்தியே என்பது இதன் மூலம் நிரூபனமாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *