நுவரெலியாவில் கேபிள் கார் (Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், உலகின் புகழ் பெற்ற இசைக் குழுக்களை இலங்கைக்கு வரவழைத்து, இரவு வேளையில் இசை நிகழ்ச்சிகளை நடத்த எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *