பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக மீண்டும் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக ஆசியக் கோப்பையிலிருந்து தமிம் இக்பால் விலகியதைத் தொடர்ந்து, அணித் தலைவர் பதவியைஅவர் ராஜிநாமா செய்தார்.
ஆசியக் கிண்ண போட்டித் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் விளையாட உள்ளது.
இதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணத்திற்காக அந்த அணி இந்தியா செல்ல உள்ளது.
அடுத்தடுத்து முக்கியமான சவால்கள் காத்திருக்கும் நிலையில், மீண்டும் அணித் தலைவர் பொறுப்பை ஷகிப் அல் ஹசன் ஏற்றுள்ளார்.
கடந்தாண்டு டெஸ்ட் மற்றும் டி20யின் அணிகளின் தலைவராக பொறுப்பேற்ற ஷகிப் அல் ஹசன், தற்போது மூன்று வகையான அணிகளுக்கும் தலைவராக உள்ளார்.