நூருல் ஹுதா உமர்

பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் வினோஜன்  தலைமையில் இன்று பனங்காடு விளையாட்டு மைதான கட்டிடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக, சமய செயற்பாடுகளில் அக்கறை காட்டும் கழகமாகவும் பனங்காடு அக்னி விளையாட்டு கழகம் திகழ்கின்றது. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளையதம்பி ரவிராஜ் அவர்களின் நிதி பங்களிப்பில் இளையதம்பி கவிராஜ் அவர்களின் பிரசன்னத்துடன் இணைந்த கரங்கள் அமைப்பினால் இந்த சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதியாக விளையாட்டு கழகத்தின் ஆலோசகர் ரமேஸ், கழக இயன் மருத்துவர் ரா. கரன், ஆலையடிவேம்பு விளையாட்டு உத்தியோகத்தர் நிஷாந்தன், ஆசிரியர் வாசன், மனோ ராஜ் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான சுரேஷ், காந்தன் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்திற்கான சீருடைய வழங்கி வைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *