பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனி தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அந்த எச்சரிக்கைகள் இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டி அதிக குளிர்ச்சியான வெப்பநிலையை நாடு சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம்.
வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்தின் சில பகுதிகள், வடகிழக்கு இங்கிலாந்து, தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் என பிரித்தானியாவின் பெரும் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பனி காரணமாக பயணத்தில் இடையூறுகள் உருவாகலாம் என்றும், சில கிராமப்பகுதிகள் துண்டிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், சில இடங்களின் மின்சார சேவையும், மொபைல் சேவையும் துண்டிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.