நூருல் ஹுதா உமர்.
நாட்டில் தற்போது சின்னமுத்து (Measels) நோய் சிறுவர்களிடயே வேகமாக பரவிவருவதானால் குழந்தை பிறந்து 09 மாதங்கள் மற்றும் 03 வயதில் போடப்படும் தடுப்பு ஊசி ஏற்றிக்கொள்ளதவர்கள் உடனடியாக ஏற்றிக்கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், திங்கட்கிழமைகளில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும், செவ்வாய்க்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், புதன்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் குறித்த தடுப்பு ஊசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சின்னமுத்து நோயிலிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ள இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.