( நூரளை பி.எஸ். மணியம்)
நுவரெலியா செங்கூஸ் (St Clair) தோட்டம் மற்றும் கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் உள்ள தாய் மற்றும் குழந்தை சுகாதார நிலையத்தை
( UN-Habitat, KOICA) “கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” நிதியுதவியுடன் 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு அன்மையில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
“இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூகப் பொருளாதார பின்னடைவை வலுப்படுத்துதல் என்ற திட்டத்தின்” கீழ் இரண்டு தாய் மற்றும் குழந்தை சுகாதார நிலையங் களை புதுப்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் திட்டமிட செயலாளர் எஸ். எல். அன்வர் கான்,நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நிஷங்க விஜேயவர்தன, சுகாதார சேவைகள் திட்டல் செயலாளர் வைத்தியர் கமில் பிரபாஷ்வர, நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி (MOH )வைத்தியர் சுதர்சன், லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜனாத் அபேரட்ன,பொது சுகாதார அதிகாரிகள் ,பொது சுகாதார மருத்துவச்சிகள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.