யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.
பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18-02-2023) மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.