பொகவந்தலாவ கொட்டியாகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சிறுவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பொகவந்தலாவ பிளான்டேசன் கிளப்பில் முன்னெடுக்கப்பட்டது.
கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் வேல்ட் விசன் அனுசரணையில் நடாத்தப்பட்ட இவ் இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்குபற்றினர்.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்இநன்நடத்தை சிறுவர் சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவும் இணைந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்குடன் சிறுவர்களின் மருத்துவத்தைஇ சுகாதாரத்தைஇபோசாக்கை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இவ் மருத்துவ முகாம் இடம்பெற்றது.
தற்காலத்தில் பொருளாதார நெருக்கடியால் சிறுவர்களுக்கு முறையான மருத்தவ வசதி கிடைக்கபெறாமையினாலும் அவர்களை நோயிலிருந்து தற்காத்து கொள்வதற்காக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இவ் இலவச மருத்துவ முகாம் பரிசோதனையில் இனங்காணப்பட்ட சிறுவர் நோயாளர்களை முறையான மருத்துவத்தை வழங்க கோரி பெற்றோர்களுக்கு வைத்திய்ர்களால் அறிவுருத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மற்றும் பொகவந்தலாவ கொட்டியாகல கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட குடும்ப நல உத்தியோகத்தர்இபொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்இகொட்டியாகல தோட்ட நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்