நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமலா துணை ஜனாதிபதி ஹாரிஸ் தெரிவிக்கையில்,
சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும் என்றும் விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.