இங்கிலாந்து நாட்டின் லண்டன், பர்மிங்கம், பொர்னிமவுத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சிறுவனிடமிருந்து அதிக அளவிலான கொகெயின், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் சிறுவன், சிறுமிகள் மூலம் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலில் 28 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான சரினா துஹல் என்ற பெண்ணும் அடக்கம்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்றது வந்தது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல், சப்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 6 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
இந்திய வம்சாவளி பெண் சரினா உள்பட 6 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.